விலகியிருக்க வேண்டியவைகள்.


 

விலகியிருக்க வேண்டியவைகள்…

தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக (உபா 23:9)

கருப்பொருள் : விலகியிருங்கள்

தலைப்பு : விலகியிருக்க வேண்டியவைகள்…

ஆதார வசனம் : உபா 23:9

துணை வசனம்: : 1யோவா 5:21; 1பேது 2:11; அப் 21:25

1. விக்கிரகாராதனையை விட்டு (1கொரி 10:14)

  • விக்கிரகாராதனைக்காரர் தேவ ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை (எபே 5:5)

  • விக்கிரக்திற்குப் படைக்கப்பட்டவைகளை புசிக்கக் கூடாது (வெளி 2:20)

  • விக்கிரகத்திற்கு மனதை செலுத்தக் கூடாது (1கொரி 10:28)

2. வேசித்தனத்திற்கு (1கொரி 6:18)

  • வேசித்தனம் சரீரத்திற்கு விரோதமான பாவமாயிருக்கிறது (1கொரி 6:18) 

  • வேசித்தனம் முறைகேடான பாவமாயிருக்கிறது (எரே 13:27)

  • வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்படுகிறது (எரே 3:1,2)

3. மாம்ச இச்சைகளுக்கு [1யோவா 2:16]

  • மாம்சத்தின் இச்சை பிசாசினாலுண்டானவையாகும் (1யோவா 2:16)

  • மாம்ச இச்சைகளை சிலுவையில் அறைய வேண்டும் (கலா 5:24)

  • மாம்ச இச்சைகளை நிறைவேற்றாதிருக்க வேண்டும் (கலா 5:16) 

4.மாறுபாடானவைகளுக்கு (2தீமோ 2:22]

  • மாறுபாடானவனுக்கு தேவன் மாறுபடுகிறவராயிருக்கிறார் (2சாமு 22:27)

  •  மாறுபாடான இருதயமுள்ளவர்கள் இகழப்படுவார்கள் (நீதி 12:8)

  •  மாறுபாடான இருவழிகளை விட்டு விலக வேண்டும் (நீதி 28:18)

5. சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு (2தீமோ 2:16)

  • வீண்பேச்சுக்கு இடங்கொடுப்போர் வழுவிப்போவார்கள் (1தீமோ 4:7)

  • வீண்பேச்சுகளால் அவபக்தியுள்ளவர்களாவார்கள் (2தீமோ 2:16)

  • அநேகர் வீண்பேச்சால் மனதை மயக்குகிறவர்களாயிருப்பார்கள் (தீத் 1:10) 

6. கட்டுக்கதைகளுக்கு (1தீமோ 4:7)

  • கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது (தீத்து 1:13)

  • கட்டுக்கதைகளின்மேல் கவனம் செலுத்தக் கூடாது (1தீமோ 1:3)

  •  தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றக் கூடாது (2பேது 1:16)

7. தர்க்கங்களுக்கு (1தீமோ 6:5)

  • தர்க்கங்களைக் கவனிக்க கூடாது (1தீமோ 1:3) 

  • தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்கும் (2தீமோ 2:23)

  •  புத்தியீனமான தர்க்கங்களை விட்டு விலக வேண்டும் (2தீமோ 2:23)

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களயிருக்கவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுக்கொள்ளும்படி அறிந்து (1தெச 4:3,4)

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி….(16பேது 2:21)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *