விலகு
சங்கீதம் 37:27
தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
சங்கீதம் 34:14
தீமையை விட்டு விலகி, நன்மை செய், சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
1.தீயோருடைய வழியை விட்டு விலகு
நீதிமொழிகள் 4:14,15
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே: தீயோருடைய வழியில் நடவாதே.
15. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே: அதை விட்டு விலகிக் கடந்துபோ.
2.மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகு
அப்போஸ்தலர் 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திொன்னான்.
3.விக்கிரகாராதனையை விட்டு விலகு
1 கொரிந்தியர் 10:14
ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
4.தீமையை விட்டு விலகு
சங்கீதம் 37:27
தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
5.வேசிமார்க்கத்துக்கு விலகு
1 தெசலோனிக்கேயர் 4:3
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
6.கட்டுக்கதைகளுக்கு விலகு
1 தீமோத்தேயு 4:7
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
7.சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு
2 தீமோத்தேயு 2:16,17
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு. அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்.
17. அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
8.பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு
2 தீமோத்தேயு 2:22
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
9.புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் விட்டு விலகு
2 தீமோத்தேயு 2:23
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
10.மாம்சஇச்சைகளை விட்டு விலகு
1 பேதுரு 2:11,12
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி,
12. புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
0 Comments