விழித்திருங்கள்


 

விழித்திருங்கள்         

மாற்கு 13:37 

நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

1. அக்காலத்தை அறியாதபடியால் விழித்திருங்கள்

மாற்கு 13 :33 அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

2. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்

மாற்கு 14 : 38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணு

ங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

3. மனுஷகுமாரன் வரும் நாளை அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

மத்தேயு 25:13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

4. தூங்குகிறவர்களாகக் கண்ுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்

மாற்கு 13:36 நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.

5. ஊழியக்காரரே விழித்திருங்கள்

லூக்கா 12:37 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6. பிசாசானவன் சுற்றித்திரிகிறான் விழித்திருங்கள் 

I பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

7. மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு விழித்திருங்கள்.

லூக்கா 21:36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

கொலோசெயர் 4:2 

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் 

ஜெபத்தில் விழித்திருங்கள்.

                    

Bro. Jeyaseelan,

Mumbai,

*Mob : 9820532501

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *