விழித்திருங்கள்!

இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு. எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (லூக் 21:36)

கருப்பொருள் : ஏன் விழித்திருக்க வேண்டும்?

தலைப்பு  : விழித்திருங்கள்!

ஆதார வசனம் : லூக் 21:36

துணை வசனம் : உன் 5:2; மத் 24:42; 1பேது 5:8

1. சோதனைக்குத் தப்ப (மத் 26:41)

  1. பிசாசானவன் சோதனைக்காரனாயிருக்கிறான் (1தெச 3:5)

  1. தேவபக்தியுள்ளவர்களைக் சோதனையினின்றுஇரட்சிக்கிறார் (1சாமு 16:13)

  1. ஐசுவரியவானாகும் ஆசை சோதனையில் சிக்க வைக்கிறது (1தீமோ 6:9) 

2. தேவனுக்கு முன் நிற்க பாத்திரவானாயிருக்க (நீதி 3:7]

  1. எலியா தேவனுக்கு முன்பாக நிற்கிறவராயிருந்தார் (1இரா 17:1)

  1. ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக நிற்கிறவராயிருந்தார் (ஆதி 18:22) 

  1. மோசே தேவனுக்கு முன்பாக நிற்கிறவராயிருந்தார் (யாத் 32:30)

3. சத்துருவின் தந்திரங்களை இனங்கண்டறிய (1பேது 5:8)

  1. பிசாசினால் நம் இருதயம் கெடுக்கப்பட்டுவிடாதபடி (2கொரி 11:3)

  1. பிசாசின் தந்திரத்தினாலே வஞ்சிக்கப்படாதபடிக்கு… (2கொரி 11:3)

  1. பிசாசு தன் இச்சையின்படி செய்ய அவனால் பிடிபடாதபடி (2தீமோ 2:26)

4. கடைசி கால சம்பவங்களுக்குத் தப்ப… (மத் 24:6) 

  1. மனுஷர் தற்பிரியராயும், பணப்பிரியராயும் இருப்பார்கள் (2தீமோ 3:2)

  1. அநேக அந்திகிறிஸ்துகள் தோன்றுவார்கள் (1யோவா 2:18)

  1. தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள் (மத் 24:24)

5. எதிராளியாகிய பிசாசானவனிடமிருந்து தப்ப (1பேது 5:8)

  1.  பிசாசு ஆத்தும நஷ்டத்தை ஏற்படுத்துகிறான் (யோவா 10:10)

  1. இருளில் இருக்கப்பண்ணுகிறான் (சங் 143:3)

  1. அடிமைப்படுத்தி வைக்கிறான் (எபி 2:15) 6. 

6. மாம்ச பெலவீனத்தை மேற்கொள்ள (மாற் 14:38)

  1. மாம்சம் பெலவீனமுள்ளதாயிருக்கிறது (மத் 26:41)

  1. மாம்சம் தான் விரும்பினவைகளை செய்ய தூண்டுகிறது (எபே 2:3)

  1. சரீர பெலவீனத்தை மேற்கொண்டு ஊழியம் செய்தல் (கலா 4:13)

7. தேவனின் சத்தத்தைக் கேட்க (உன் 5:2)

  1. சாமுவேல் தேவனின் சத்தத்தைக் கேட்டார் (1சாமு 3:10)

  1. ஆபிரகாம் தேவனின் சத்தத்தைக் கேட்டார் (ஆதி 22:11)

  1. யாக்கோபு தேவனின் சத்தத்தைக் கேட்டார் (ஆதி 46:2)

எண் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான் (நீதி 8:34)

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (10து 5:8)

Categories: வி

1 Comment

Ezhil Antony · 23/10/2024 at 10:30 am

I want cana oor kalyam tamil mes

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *