வேண்டிக்கொண்டதின்படி எல்லாம் செய்வார்
*உபாகமம் 18:16*
[16]ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
1.வேண்டிக்கொண்டபடியே மறுமொழி அளித்தார்
==========================
*1 சாமுவேல் 7:9*
[9]அப்பொழுது சாமுவேல், இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார்.
2.வேண்டிக்கொண்டபடியே ஆசீர்வதித்தார்
==========================
*1 நாளாகமம் 4:10*
[10]யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
3.வேண்டிக்கொண்டபடியே சுகமளித்தார்
==========================
*மத்தேயு 8:6(5-13)*
[6]ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
*மத்தேயு 14:36; மாற்கு 1:40*
4.வேண்டிக்கொண்டபடியே உயிர்ப்பித்தார்
==========================
*மாற்கு 5:23(22-24; 35-43)*
[23]என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
5.வேண்டிக்கொண்டபடியே கேட்கவும் பேசவும் வைத்தார்
==========================
*மாற்கு 7:32(31-37)*
[32]அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
6.வேண்டிக்கொண்டபடியே பார்வை அளித்தார்
==========================
*மாற்கு 8:22(22-25)*
[22]பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
7.வேண்டிக்கொண்டபடியே ஜுரம் நீங்கசெய்தார்
==========================
*லூக்கா 4:38,39*
[38]பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
==========================
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
0 Comments