வேதத்தில் பன்னிரண்டு (12)
1) 12 கோத்திரங்கள் – அப்போ 26:7
2) இயேசுவின் சிஷர்கள் 12 பேர் – லூக் 9:1
3) சாப்பிட்டு மிதியான துணிக்கைகள் 12 கூடை – யோ 6:13
4) யாக்கோபுக்கு 12 பிள்ளைகள் – ஆதி 35:23
5) பெரும்பாடுள்ள ஸ்திரி 12 வருஷமாக ஆஸ்திகளை எல்லாம் செலவழித்தும் நோயிலிருந்து சுகமாக்கபடவில்லை – லூக் 8:43
6) ஜெப ஆலயத்தலைவன் யவிரு தனது 12 வயது மகனுக்காக இயேசுவின் பாதத்தில் விழுந்து இயேசுவை தன் வீட்டிற்கு வரும்படி வேண்டிக் கொண்டான் – லூக் 8:41
7) இயேசுவின் பெற்றோர் இயேசுவுக்கு 12 வயதான போது பஸ்கா பண்டிகை ஆசரிக்க இயேசுவை கூட்டிக் கொண்டு எருசலேமிற்கு போனார்கள் – லூக் 2:41,42
8) தேவனுடைய நகரமாகிய எருசலேமிற்கு 12 வாசல்கள் இருந்தது – வெளி 21:12
9) புதிய எருசலேமின் நதியின் இருகரையிலும் 12 விதமான கனிகளை தரும் ஜிவ விருட்சம் இருந்தது – வெளி 22:2
10) யோசுவா யோர்தானில் எடுத்து வந்த 12 கற்களை கில்காலில் நாட்டினான் – யோசுவா 4:20
11) 12 நீருற்றுகள் – யாத் 15:27
12) 12 தூண்கள் – யாத் 24:4
13) 12 கோல்கள் – எண் 17:2
14) 12 கீரிடங்கள் – வெளி 12:1