வேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்
1) வேலைக்காரன் மீது அன்பு பாராட்டின 100 க்கு அதிபதி – மத் 8:8
2) யோசேப்பு தன் சகோதரர்கள் 11 பேரையும் மன்னித்து, அன்பு பாராட்டி மரணபரியந்தம் போஷித்தான் – ஆதி 43:30
3) விதவையான சூழ்நிலையிலும் தன் மாமியிடம் அன்பு பாராட்டின ரூத் – ரூத் 1:16
4) குழந்தை இல்லாத சூழ்நிலையிலும் தன் மனைவியாகிய அன்னாளை நேசித்த எல்கானா – 1 சாமு 1:5,8
5) தாவீது தன்னை கொலை செய்ய வகை தேடின சவுலை நேசித்தான் – 1 சாமு 16:21
6) நாகமான் குணப்பட வேண்டுமென்று அன்பாக பேசி சிரியா நாட்டில் இருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பி வைத்த சிறு பெண் – 2 இராஜ 5:3
7) ஆபிரகாம் பகைவர்களால் கடத்தி கொண்டு போகப்பட்ட தன் சகோதரன் லோத்தின் மீது அன்பு கொண்டு போரிட்டு மீட்டான் – ஆதி 14:14-16