வேதத்தில் 30 (முப்பது)
1) யூதாஸ் இயேசுவை 30 வெள்ளிக்காசுக்கு காட்டி கொடுத்தான் – மத் 27:3
2) இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவருக்கு வயது 30 – லூக் 3:21-23
3) நோவா செய்த பேழை 30 முழ உயரம் கொண்டது – ஆதி 6:15
4) யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது 30 – ஆதி 41:46
5) தாவீது ராஜாவாகும் போது அவனுக்கு வயது 30 – 2 சாமுவேல் 5:4
6) 30 நாள் வரை தரியூ இராஜாவை தவிர வேறு எந்த தேவனையும், மனுஷனையும் நோக்கி விண்ணப்பம் பண்ணினால் அவன் சிங்க கெபியில் போடப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது – தானி 6:7
7) சாலமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின ஆலயத்தின் உயரம் 30 முழம் – 1 இராஜ 6:2
8) நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை ஒன்று 30 மாக பலன் தந்தது – மாற் 4:8
0 Comments