மிஞ்சாதே


 

மிஞ்சாதே

மத்தேயு 5:37

 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். 

(மிஞ்சி எதையும் பேசக்கூடாது

சின்ன விஷயத்தை ரொம்பவே பெரிதாக பேசுவார்கள்)

*நீதிமொழிகள் 25:16*

 தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 

எதில் நாம் மிஞ்சி போக கூடாது

1. அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்ட கூடாது

*2 கொரிந்தியர் 10:13*

 நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிட்வரக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 

14 உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. 

(உ.ம்) நேபுகாத்நேச்சர்

(தானியே 4:30)

2.மிஞ்சின நீதிமானாயிராதே

*பிரசங்கி 7:16*

 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? 

*ஏசாயா 64:6* – நம்முடைய நீதி கர்த்தருடைய பார்வையில் அழுக்கான கந்தையை போல் உள்ளது.

(உ.ம்) லூக்கா 18:13 – பரிசேயன்

3.எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம்

*1 கொரிந்தியர் 4:6*

 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *