10 கட்டளைகளும் அதை மீறியவர்களும்

கட்டளை 1 (யாத் 20:3)

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

மீறியவர்: சாலொமோன் இராஜா

( 1இராஜா 11 அதி)

  • 700 மனைவிகளும் 300 மறுமனையாட்டிகளும் திருமணம் செய்து, அந்த ஸ்திரீகளின் நிமித்தம் அநேக புற ஜாதி தேவர்களை சேவித்து முதல் கட்டளையை மீறினார்.

கட்டளை 2 (யாத்20:4-6)

யாதொரு விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம்.

மீறினவர் : இஸ்ரயேலர் 

  • பொன் கன்றுக்குட்டிகளையும் (யாத் 32 அதி)

  • தங்களைச்சுற்றியிருந்த அநேக புறஜாதி தேவர்களுக்கு பலிபீடம் கட்டி விக்கிரக தோப்புகளை உண்டாக்கி (நியா2:10-14,  2இராஜா 21:1-15,  எரேமி 1:16) இரண்டாவது கட்டளையை மீறினர்.

கட்டளை 3 (யாத் 20:7)

தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

மீறினவர் : சிதேக்கியா இராஜா (எசேக் 17:15-21)

  • தன்னுடன் உடன் படிக்கை செய்து தன்னை எருசலேமுக்கு இராஜாவாக்கிய நேபுகாத்நேச்சாரின் உடன்படிக்கையை முறியடித்து, நயமாக ஆசைகாட்டிய எகிப்துடன் உறவு வைத்து மூன்றாவது கட்டளையை மீறி தேவனுடைய நாமத்தை தூஷித்தார்.

கட்டளை 4 (யாத் 20:8): 

ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.

மீறியவர் : 

ஒரு மனிதன் (எண்15:32-36)

  • இஸ்ரயேலர்களின் வனாந்திரப்பிரயானத்தில் ஒரு மனிதன்  ஓய்வு நாளில் விறகு பொறுக்கியதால் கட்டளையை மீறினான்.

யூதா கோத்திரம் (2நாளா 36:21)

  • இவர்கள் ஓய்வு வருஷங்களை கட்டளைப்படி அநுசரிக்காததால் (லேவி 25:4,26:33-35) தேசம் தன்னுடைய ஓய்வு வருசங்களை அனுபவித்து தீருமட்டும் 70 வருடம் அது பாழாய் கிடந்தது.

கட்டளை 5 (யாத்20:12)

தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.

மீறியவர் : ஏலியின் குமாரர்களான ஓப்னியும், பினெகாசும் (1சாமு 2:12,23-25)

  • தன் தகப்பனின் சொல்லைக் கேளாமல் பரிசுத்த ஸ்தலத்தில் தவறுகள் செய்து கட்டளையை மீறினர்.

கட்டளை 6 (யாத் 20:13)

கொலை செய்யாதிருப்பாயாக.

மீறியவர்: அபிமெலேக்கு (நியாயா 9:5,56)

  • தன் தகப்பனாகிய யெருபாகாலின் குமாரர்கள் 70 பேரை ஒரே கல்லின் மேல் கொலை செய்து கட்டளையை மீறினான்.

கட்டளை 7 (யாத் 20:14)

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

மீறியவர் : தாவீது (2சாமு 11:2-5)

  • உரியாவின் மனைவியை இச்சித்து ,விபச்சாரம் செய்து ,உரியாவை கொலை செய்து கட்டளையை மீறினார்.

கட்டளை 8 (யாத்20:15)

களவு செய்யாதிருப்பாயாக.

மீறியவர் : ஆகாப் இராஜா 1இராஜா21:1-19

  • நாபோத்தின் தோட்டத்தை இச்சித்து, அதற்காக அவனை கொலை செய்து,அவன் தோட்டத்தை களவாடி தேவனுடைய கட்டளையை மீறினான்.

கட்டளை 9 (யாத் 20:16)

பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

மீறியவர்: சவுல் ராஜா(1சாமு 15:13-25)

  • அமலேக்கியரை மடங்கடிக்கும்போது எல்லாவற்றையும் சங்கரித்து கொன்று போடக்கடவாய் என்ற கட்டளையை மீறி,  நலமானதையும் கொழுத்தவைகளையும் எடுத்துக்கொண்டு வந்து,தேவனுக்கு பலியிடவே எடுத்தோம் என்று பொய் சொல்லி கட்டளையை மீறினார்.

கட்டளை 10 (யாத்20:17)

இச்சியாதிருப்பாயாக

மீறியவர்: ஆகான் (யோசு7:10-26)

  • யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும்,ஐம்பது சேக்கல் நிறையான பொன்பாளத்தையும் இச்சித்து தேவனுடைய கட்டளையை மீறினான்.

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *