நிறைவேற்றுவார்
எரேமியா 33:14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
1.உடன்படிக்கைபண்ணின, அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவார்
நெகேமியா 9:8
அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர். நீர் நீதியுள்ளவர்.
2. நம்முடைய ஆலேனைகளையும், வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவார்
சங்கீதம் 20:4,5
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
3.எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்
யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.