இயேசுவின் வாழ்வில் தூதர்கள்
1) இயேசு பிறக்கும் முன் மரியாளை சந்தித்து இயேசு பிறக்கும் நற்செய்தியை அறிவித்தார்கள் தூதர்கள் (லூக் 1:28)
2) யோசேப்பை சந்தித்து மரியாளை சேர்த்துக்கொள், குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாய்யாக என்று பெயர் வைத்தார்கள் தூதர்கள் (மத் 1:20)
3) இயேசுவின் பிறப்பின் போது மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பின் நற்செய்தியையும் பிறந்த இடத்தையும் அறிவித்தார்கள் தூதர்கள் (லூக் 2:10)
4) இயேசு பிறந்த போது குழந்தையை கொல்ல நினைத்தான் ஏரோது. எகிப்துக்கு செல்ல யோசேப்புக்கு கனவில் காட்சியளித்தனர் தூதர்கள் (மத் 2:13)
5) இயேசுவின் வனாந்தர சோதனையின் போது அவரை பலப்படுத்த வந்தார்கள் தூதர்கள் (மத் 4:11)
6) இயேசுவின் மரணத்துக்கு முன் கெத்சமனே தோட்டத்தில் அவரை பலப்படுத்த வந்தான் தூதன் (லூக் 22:43)
7) இயேசு உயிர்த்தெழுந்த போதும், இயேசு விண்ணகம் செல்லும் போதும் வெண்ணங்கி தரித்த தூதர்கள் இருந்தார்கள் (யோ 20:12)
8) இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்மை மீட்க விண்ணுலகின் பரிசுத்த தூதர்களும் வருவார்கள் (மத் 25:31)