உட்பிரவேசியுங்கள்
மத்தேயு 7:13
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
- அவர் வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்
(கர்த்தருடைய வார்த்தை) அப்போது இரட்சிப்பும் , மேய்ச்சலும் கிடைக்கும்.
யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
- அவர் திறந்த வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்
(தேவன் நமது திறந்த வாசல் ) அப்போது வாழ்வில் விடுதலை கிடைக்கும்.
மீகா 2:13
தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்.
- இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்
(உபத்திரவம் நெருக்கம் பாடுகளின் பாதை) அப்போது நித்திய ஜீவன் கிடைக்கும்.
மத்தேயு 7:13,14
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.