எது புத்தியீனம்


எது புத்தியீனம்

சங்கீதம் 69:5 தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர், என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

தீத்து 3:3 ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

அவசரப்படுதல் புத்தியீனம்

1 சாமுவேல் 13:13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர். உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர். மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

குற்றப்படுத்துதல் மற்றவர்களை நியாயந்தீர்ப்பது புத்தியீனமான செயல்

யோபு 42:8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள். என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான். நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன். என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றான்.

வேற்றுமை, கலகம் பண்ணுவது புத்தியீனமான செயல்

எண்ணாகமம் 12:11(1,2) அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் புத்தியீனமான செயல்

2 சாமுவேல் 24:10 இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது. அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினால் பெரிய பாவஞ்செய்தேன். இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *