நடந்து கொள்ளுங்கள் எரேமியா37:21
[1] பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே( பூமியிலே) பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் (வாழும் வரை) பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் .
(1பேதுரு1:17)
[2] நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
(1பேதுரு2:12).
[3] அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
(இயேசு) கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச்(பிதாவுக்கு) சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர்5:2
[4] வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் ; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.எபேசியர்5:8
[5] கவனமாய் நடந்துகொள்ளுங்கள்.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.எபேசியர்5:15-16