பழையதை விலக்குங்கள் !


பழையதை விலக்குங்கள் !  (லேவி 26:10)

 

– புதிய தானியத்திற்கு இடமுண்டாகும்படி,பழையதை விலக்குவீர்கள்.

(லேவி 26:10)

 

பழையது எது?

 

1) பகை :-

(எசே 35:5)

 

” நீ பழைய பகையை வைத்து…”

(எசே 35:5)

 

– பழைய பகையை

விலக்கி புது சிருஷ்டியாகுங்கள்  !

 

2) பணப் பை :-

(லூக் 12:33)

 

“பழமையாய்ப் போகாத பணப்பைகளையும்… பரலோகத்தில் உங்களுக்கு சேர்த்து வையுங்கள்”.

– லூக் 12:33

 

– பழமையாய்ப் போன பண பைகளை இங்கே விலக்கி,பழமையாய் போகாத பண பைகளை பரலோகத்தில் சேர்ப்போம்.!

 

3) எழுத்து :-

(ரோம 7:6)

 

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின் (நம்மைக் கட்டிவைத்திருந்த நியாயப்பிரமாணம்) படியல்ல… புதுமையான  ஆவியின் படி ஊழியஞ்செய்யதக்கதாக.. அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

(ரோம 7:6)

 

“கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்… பழிக்கு பழி என்கிற பழையவைகளுக்கு விலகி, கிறிஸ்துவின் பிரமாணங்களுக்குள் வருவோம்” !

 

4) புளித்த மா

(1கொரி 5:7-8)

 

“நீங்கள்… புதிதாய் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை பறம்பே கழித்துப் போடுங்கள்”.

1 கொரி 5:7

 

பழைய புளித்த மாவேடே (துர் குணம், பாதுகாப்பு) அல்ல துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிகக்கக் கடவோம்.

(1 கொரி 5:8)

 

“துர்குணம், பொல்லாப்புக்கு விலகி நற்குணங்களை நாளும் பேணுவோம்” !

 

5) கெட்டுப்போகும் மனிதன் :-

(எபே 4:27)

 

….முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற

பழைய மனுஷனை

நீங்கள் களைந்துப் போட்டு,

– எபே 4:22

 

“கெட்டு போகச்செய்யும் இச்சைகளுக்கு விலகி கேட்டுக்கு தப்புவோம்” !

 

6) மோசம் போக்கும் பிசாசு :-

(வெளி 12:9)

 

“உலகமனைத்தையும் மோசம் போக்கும் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலு சர்ப்பம் தள்ளப்பட்டது…”

– வெளி 12:9

 

– மோசம் போக்கும் பிசாசின் செயல்களுக்கு விலகி, ஆவியானவரை சார்ந்துக்கொள்வோம் !

 

7) பொத்தலான திராட்ச ரச துருத்தி :-

(யோசு 9:4)

 

பீறலும் பொத்தலுமான பழைய திராட்ச ரச துருத்திகளையும்…

– யோசு 9:4

 

உபயோகப்படுத்த படுத்த முடியாத கிரியைகளை விலக்கி புது (அபிஷேகம்) இரசம் ஊற்றப்பட தகுதியாகுங்கள் !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *