பூரணம்


பூரணம்

 

யாக்கோபு 1:4

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

 

பூரண கிருபை

 

அப்போஸ்தலர் 4:33

கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

(அவரை குறித்து சாட்சி சொல்லவேண்டும்)

 

பரிபூரண தேவசித்தம்

 

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

(மறுரூபமாக்கப்பட்ட புதிய மனதோடு இருக்க வேண்டும்)

 

பூரண அறிவு

 

கொலோசெயர் 3:10

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

(புதிய மனுஷனை தரித்துக் கொள்ள வேண்டும்)

 

பூரண நிச்சயம்

 

எபிரேயர் 10:21

தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

22.துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

 

பூரண கிரியை(பொறுமை என்ற கிரியையில் பூரணம் வேண்டும்)

 

யாக்கோபு 1:4

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

 

பூரண நம்பிக்கை

 

1 பேதுரு 1:13

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

(மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *