விசுவாச துரோகம்


விசுவாச துரோகம் 2 தெச 2:3  – லூக்கா 18:8

பிசாசின் நோக்கம்

  •  விசுவாச துரோகம் ஏற்படுத்துவது

ஏன் இதை செய்கிறான்

  •  இது நிறைவெறினால் மட்டுமே அவன் உலகை நேரடியாக ஆள முடியும்

விசுவாச துரோகம் என்றால் என்ன?

தேவனை நிராகரித்தல்:

நன்மையை பெற்றுக்கொண்டு விட்டு விலகுவது

  •  பசி மற்றும் தாகம் காரணமாக: யாத்தி 15:23-24;16:2-3; எண் 11:4-6; எண் 20:2-5.
  •  விக்கிரகாராதனை காரணமாக: யாத்தி 32:1-6; எண் 25:1-3.
  •  பயம் மற்றும் அவநம்பிக்கை காரணமாக: எண் 13:31-33;14:1-4.
  •  எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி காரணமாக: எண் 16:1-3.

சத்தியத்தை நிராகரித்தல்:

வேதாகமத்தில் உள்ள சத்தியத்தை அறிந்தும்கூட அதை வேண்டுமென்றே மறுதலிப்பது.

  •  சத்தியத்தை அறிந்தும் பாவம் செய்வது – எபி. 10:26-27
  •  சத்தியத்தை அறிந்த பின்பு விலகுதல் – 2 பேது 2:20-21
  •  சத்தியத்தை பொய்யாக்குதல் – ரோமர் 1:18-25
  •  ஒளியை அறிந்தும் இருளை விரும்புதல் – யோவான் 3:19-20
  •  சத்தியத்தை நேசிக்க மறுப்பதால் தீர்ப்பு – 2 தெச 2:10-12

பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துதல்:

பரிசுத்த ஆவியானவர் உள்ளுக்குள் இருந்து போதித்தாலும், அதை நிராகரித்து பாவத்தில் மூழ்குவது.

  •  ஆவியை துக்கப்படுத்துவது – எபே 4:30
  •  ஆவியை அணைப்பது – 1 தெச 5:19
  •  மாம்ச ஆசையைத் தேர்வு செய்வது – கலா 5:16-17
  •  ஆவிக்கே எதிர்த்து நடப்பது – அப் 7:51

பின்வாங்குதல்:

ஒரு காலத்தில் விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்கள், பின்னர் விசுவாசத்தை விட்டு விலகி, பழைய உலக வாழ்விற்கு திரும்புவது.

  •  விசுவாசத்தில் இருந்து விலகுவது – 1 தீமோ 4:1
  •  மீண்டும் பாவத்தில் விழுவது – 2 பேது 2:20-22
  •  முதல் அன்பை விட்டுவிடுதல் – வெளி 2:4-5
  •  சீஷர்கள் பின்வாங்குதல் – யோவான் 6:66
  •  உலக ஆசைக்காக விலகுவது – 2 தீமோ 4:10
  •  மீண்டும் சிலுவை அறைதல் – எபி 6:4-6
  •  பின்வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை – எபி 10:38-39

விசுவாசத்தில் இருந்து விலகிய நபர்கள்

  •  தேமா – உலக ஆசை காரணமாக விலகினான்.
    • 2 தீமோத்தேயு 4:10
  •  சவுல் – கட்டளைக்குக் கீழ்ப்படையாமல் பின்வாங்கினான்.
    • 1 சாமுவேல் 15:11, 26
  •  யூதாஸ் – பேராசை காரணமாக துரோகம் செய்தான்.
    •   மத்தேயு 26:14-16; 27:3-5
  •  அனனியாவும் சப்பீராவும் – பொய் சொல்லி பரிசுத்த ஆவிக்கு எதிரானார்கள்.
    •   அப்போஸ்தலர் 5:1-11
  •  இமேனேயும் அலெக்சாந்தரும் – விசுவாச கப்பலை உடைத்தார்கள்
    •   1 தீமோத்தேயு 1:19-20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *