அபிஷேகத்தின் வல்லமை
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
1.நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் நூகங்களை அபிஷேகத்தின் வல்லமை முறிக்கும்.
ஏசாயா 10:27
அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
2. அபிஷேகம் நமக்கு போதிக்க வல்லமையுள்ளது.
1 யோவான் 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
3. அபிஷேகம் ஒரு மனுஷனை உயர்த்த வல்லமையுள்ளது.
1 சாமுவேல் 2:10
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொருக்கப்படுவார்கள். வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார். கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
4. அபிஷேகத்தின் வல்லமை தேவ கிருபையை கொண்டுவரும்
2 சாமுவேல் 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
5. அபிஷேகம் தேவ வல்லமையினால் நிரப்பும்.
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
1 Comment
நெகேமியா · 15/10/2024 at 4:15 pm
ஆமென்