ஆண்டவரின் வசனம்

சங்கீதம் 68:11

ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. 

1. அவருடைய வசனம் நம்மை புடமிடும்

சங்கீதம் 105:19

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 

2.அவர் தமது வசனத்தை அனுப்பி  குணமாக்குவார் , தப்புவிக்கிறார். 

சங்கீதம் 107:20

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். 

3. அவருடைய வசனம் நம்மை பக்திவிருத்தியடைய செய்யும்

அப்போஸ்தலர் 20:32

இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 

சங்கீதம் 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே. 


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *