இருதயத்தில்
1.இருதயத்தில் தீர்மானம் உள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.
தானியேல் 1:8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
2. இருதயத்தில் விருப்பம் இருக்க வேண்டும்.(தேவனுடைய காரியத்தில்)
1 இராஜாக்கள் 8:17
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
3. இருதயத்தில் தேவவார்த்தை இருக்க வேண்டும்.
எரேமியா 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
4. இதயத்தில் சந்தேகப்படாத விசுவாசம் இருக்க வேண்டும்.
மாற்கு 11:23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
5. இருதயத்தில் சாந்தமும் அமைதலுமுள்ள குணம் இருக்க வேண்டும்
1 பேதுரு 3:4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.