எது நல்லது

1.தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்

*சங்கீதம் 73:28*

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். 

2.உபத்திரவப்படுவது  நல்லது

*சங்கீதம் 119:71*

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். 

3. அவர் செய்த நன்மைகளை எண்ணி துதிப்பது நல்லது

*சங்கீதம் 147:1*

கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. 

4.இளம்பிராயத்தில் நுகத்தைச் (பாடுகளை) சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது

*புலம்பல் 3:27*

தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. 

5.நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது

*புலம்பல் 3:26*

கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. 

6.நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது

*கலாத்தியர் 4:18*

நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான். அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *