எப்பொழுதும் – நாம்
2 கொரிந்தியர் 9:8
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
1.எப்பொழுது பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்யும் அனுபவம்
*யோவான் 8:29*
என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.
2. எப்பொழுதும் கர்த்தருக்கு பயந்திருக்கும் அனுபவம்
*உபாகமம் 14:22*
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
3. எப்பொழுதும் கற்பனைகளை வைக்கொள்ளும் அனுபவம்
*உபாகமம் 11:1*
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
4. எப்பொழுதும் கர்த்தரை முன்பாக வைத்திருக்கும் அனுபவம்
*சங்கீதம் 16:8*
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
5. எப்பொழுதும் தேவனை துதித்துக் கொண்டிருக்கும் அனுபவம்
*சங்கீதம் 84:4*
உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
6. எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கும் அனுபவம்
*லூக்கா 21:36*
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
7. எப்பொழுதும் கர்த்தருடைய கிரியையிலே பெருகும் அனுபவம்
*1 கொரிந்தியர் 15:58*
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக.
8. எப்பொழுதும் எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாய் இருக்கும் அனுபவம்
*2 கொரிந்தியர் 9:8*
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
9. எப்பொழுதும் வாயின் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாய் இருக்கும் அனுபவம்
*கொலோசெயர் 4:6*
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
10. எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் அனுபவம்
*1 பேதுரு 3:15*
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.