கர்த்தர் பெரியவர்
சங்கீதம் 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
1.தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் – உயர்ந்தவர் ஆராதிக்கப்படத்தக்கவர்
2 நாளாகமம் 2:5
எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர், ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
(யாத் 18:11 , 2 சாமு 7:22)
2.யோசனையிலே பெரியவர் – சர்வ வல்லவர்
எரேமியா 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
3.உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் – ஜெயம் அளிப்பவர்
1 யோவான் 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
4.நம்முடைய இருதயத்திலும் பெரியவர்- எல்லாம் அறிந்தவர்
1 யோவான் 3:20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
0 Comments