காகங்களை கவனித்து பாருங்கள் – லூக் 12:24
காகம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
1) கா கா என்று சத்தமிடும்
நாமும் சத்தமாக கர்த்தரை துதிக்க வேண்டும். கர்த்தரை துதிப்பது குறைய கூடாது
2) எப்போதும் விழித்திருக்கும் (கவனமாக இருக்கும்) (யாரும் அதை பிடிக்க, அடிக்க முடியாது)
நாமும் ஆவிக்குரிய ஜிவியத்தில் விழிப்போடு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆதாம், ஏவாளை போல விழுந்து விடுவோம். “விழித்திருங்கள் பிசாசு கெர்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் (1 பேதுரு 5:8)”
3) தைரியம் உள்ளது (எந்த வீட்டலும், கடையிலும் நுழையும்)
கஷ்டங்கள், நஷ்டங்கள், போராட்டங்கள் வரும் போது நாம் தைரியமாக இருக்க வேண்டும். விசுவாசம் இருந்தால் தைரியம் இருக்கும் (எபேசி 3:12) “நீதிமான்கள் சிங்கத்தை போல தைரியமாக இருக்கிறார்கள்” நீதி 28:1
4) யாரையும் நம்பாது
நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்பாதே (ஏசா 2:22). கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்(சங் 40:4)
5) நாளைக்காக கவலை படாது (ஆகாரத்தை சேர்த்து வைக்காது)
நாமும் நாளைக்காக கவலை படக்கூடாது. ஒன்றுக்கும் கவலை படாமல் என்று பிலி 4:6 ல் வாசிக்கிறோம்
6) ஆகாரத்திற்காக கர்த்தரை நோக்கி கூப்பிடும் (சங் 147:9)
(ஜெப ஜிவியம்) நாமும் நமது எல்லா தேவைக்காக கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டும். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங் 121:1)
7) ஊழியரை (எலியாவை) போஷித்தது (1 இராஐ 17:4)
நாமும் தேவ ஊழியர்களின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். பரிசுத்தவான்களூடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் (ரோ 12:13)
8) கூடி வாழும் பறவை
நாமும் கர்த்தருடைய பிள்ளைகளோடு ஜக்கியம் கொள்ள வேண்டும். இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் இன்பமுமானது (சங் 133:1)
9) அதிகாலையில் எழூம்பிவிடும்
தேவ பிள்ளைகள் சூரியன் உதிக்கும் முன்னால் எழூம்ப வேண்டும். “அதிகாலயில் என்னை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்” (நீதி 8:17)
10) குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ளும்
தேவ பிள்ளைகள் பேச்சில், கிரியைகளில் பரிசுத்தமாக காணபட வேண்டும். “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி 22:11)
11) சாப்பாடு கிடைத்தால் தானும் சாப்பிட்டு மற்ற காகங்களை கூப்பிட்டு கொடுக்கும்
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு (ஏசா 58:7). 2 அங்கி உள்ளவன் இல்லாதவனுக்கும், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்ய கடவன் (லூக் 3:11) விசுவாசிகள் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள் (அப்போ 2:44,47)
12) தன் குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்த்து, பறக்கவும் கற்று கொடுக்கும்
நாமும் நமது பிள்ளுகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்து (நீதி 22:6)
13) சுறுசுறுப்புள்ள பறவை
நாமும் ஆவிக்குரிய காரியங்களை சுறுப்போடு, உற்சாகமாக செய்ய வேண்டும் (சங் 54:6, 119:108)
14) இரையை தூரத்தில் இருந்து பார்த்து கணடு பிடிக்கும்
நாமும் நமது உணவாகிய வேத வசனத்தை வேதத்தில் தேடி தேடி வாசிக்க வேண்டும் (ஏசா 34:16)
15) ஒரு காகம் செத்து விட்டால் அது கூடி சத்தம் போடும்
அழுகிறவர்களுடனே அழுங்கள (ரோ 12:15) தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்து கொள்ளூங்கள் (எபி 13:3)
16) தனது எல்லைக்குள் வரும் கழுகை (கழுகு காகத்தை விட பலம் வாய்ந்தது) விரட்டி அடிக்கும்
நாமும் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து அவனுக்கு (பிசாசுக்கு) எதிர்த்து நில்லுங்கள் (1 பேதுரு 5:9)