காப்பாற்றுகிறார்


 காப்பாற்றுகிறார்

சங்கீதம் 5:11

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக, நீர் அவர்களைக் காப்பாற்றுவீர், உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. 

1.பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

நீதிமொழிகள் 2:8

அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். 

(2 சாமுவேல்-8:6, யோசுவா  -24:17)

2.கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்

சங்கீதம் 145:20,21

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். 

21. என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக, மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது. 

3.பரதேசிகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும்

சங்கீதம் 146:9

பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 

( எரேமியா- 49:11)

4. அவருடைய சித்தத்தின் படி செய்கிறவர்களை அவர் காப்பற்றுகிறார்

2 தீமோத்தேயு 4:18

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார். அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *