சிங்கம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம் (வெளி 10-3)

பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி) (சங் 132-16). 

நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு (சங் 118-15). 

சிங்கத்தை போல நாமும் கர்த்தரை கெம்பிரமாக துதிக்க வேண்டும் (2 நாளா 20:19)

2) பின்னடையாது (நீதி 30-30)

தேவ ஜனங்கள் அவிக்குரிய  வாழ்க்கையில் பின்னடைய கூடாது.

 

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் – எபிரேயர் 10:38. 

பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய் விட கூடாது (லூக் 8:13)

3) தைரியமான மிருகம் (நீதி 28-1)

நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும். 

நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும் (1 யோ 3-21). 

விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும் (எபேசி 3-12)

4) பலமானது (நியாதி 14-18)

நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் – சங் 84-7

5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் (நாகூம் 2-12)

தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம் (உபா 8-3). 

வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். 

அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன் (யோபு 23-12)

6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்

அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது – மத் 7-11)

7) பயப்படாது

தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது. 

ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார் (மாற்கு 4-40). 

விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.

8) மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3-10)

மறைவிடம் தாழ்மையை குறிக்கும். 

நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளி படுத்த வேண்டும்

9) காட்டுக்கு ராஜா 

 நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம் (வெளி 1-6)

Categories: சி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *