8.சோர்ந்து போகாதே
எபிரேயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எதில்யெல்லம் சோர்ந்து போகக்கூடாது ?
1. ஜெபம் பண்ண சோர்ந்து போகக்கூடாது
லூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
2.நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போம்
கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
3. ஊழியத்தில் சோர்ந்து போகக்கூடாது.
2 கொரிந்தியர் 4:1,16
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
16. ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
எப்போது நாம் சேர்ந்து போகக்கூடாது ?
4.கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே
நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
5. ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போகக்கூடாது
நீதிமொழிகள் 24:10
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.
6.உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருங்கள்
எபேசியர் 3:13
ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
0 Comments