தாயை கனம்பண்ணு


 26.தாயை கனம்பண்ணு

நீதிமொழிகள் 31 : 28

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்;

1.தாய்க்கு பயந்து நடக்க வேண்டும்

லேவியராகமம் 19:3 

உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

2. தாயின் போதகத்தைத் தள்ளாதே.

நீதிமொழிகள் 1 : 8

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

3.பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்

எபேசியர் 6 : 1

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்

4.தாயை கனம்பண்ணு

எபேசியர் 6 : 2

உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

5.தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே

நீதிமொழிகள் 23:22 

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

6.தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்று சொல்லாதே.

ஏசாயா 45 : 10

தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!

7.தாயை அலட்சியம்பண்ணணாதே

நீதிமொழிகள் 15 : 20

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்

ஏசாயா 66:13 

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

Bro. Jeyaseelan, Mumbai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *