தேவன் அறிந்திருக்கிறார்
நாகூம் 1:7
கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
1.நாம் போகும் வழியை அவர் அறிவார்
யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
2. நம்முடைய இருதயத்தின் நினைவுகளை கர்த்தர் அறிவார்
ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
3. நம்முடைய நிலையை அவர் அறிவார்
உபாகமம் 2:7
உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார், இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்,; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
0 Comments