பாழாய்க்கிடக்கிறதை


 பாழாய்க்கிடக்கிறதை

எசேக்கியேல் 36:36

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். 

1.பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களை தன் பாதங்களால் சீர்ப்படுத்தும் கர்த்தர்

சங்கீதம் 74:3

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும், பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 

2.பாழானதைப் பயிர்நிலமாக்கும் கர்த்தர்

எசேக்கியேல் 36:36

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

3. பாழான இடத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் கர்த்தர்

ஏசாயா 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். 

4. பாழான இடத்தில் கனிகளை புசிக்கப்பண்ணும் கர்த்தர்

ஆமோஸ் 9:14

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். 

5. பாழாய் கிடக்கிற இடத்தை பிரகாசிக்கப்பண்ணும் கர்த்தர்

தானியேல் 9:17

இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். 

3 comments on “பாழாய்க்கிடக்கிறதை

Geetha

Very blessing use full my daily life

Reply
Geetha

Use full words

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *