பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் ?
நியாயாதிபதிகள் 13:12
அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்
போது, அந்தப்பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை
எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக – எபேசியர் 6 : 4
2. சிட்சித்து வளர்க்க வேண்டும்
– நீதி 19 : 18, நீதி 29:17, நீதி 3:12
ஏலி தன் குமாரர் தவறு செய்ததை அறிந்தும் அடக்கவில்லை அவர்கள் இஷ்டத்திற்கு விட்ட விட்டன் – 1 சாமுவேல் 3:13
3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
– நீதி 22 : 6 நோவாவை போல பிள்ளைகளை கர்த்தருக்குள் எச்சரித்து நடத்து, குடும்பமாக பேழைக்குள் பிரவேசித்தான்
4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து
– உபா 6 : 6-7
ஆபிரகாம் போதித்தான் தன் பிள்ளைகளுக்கு – ஆதி 18:19
5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளை விடாமல் நடத்த வேண்டும்
– நீதி 29 : 15
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட சிம்சோன் – நியா 14:2,3
6. பிள்ளைகளுக்காக தினமும் விண்ணப்பம் செய்ய வேண்டும்
– ஆதி 17:20
ஆபிரகாம் தன் குமாரன் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்தான்
7. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்
பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
– மத்தேயு 19 : 13,14,
இயேசுவின் தாய் தகப்பன் ஆலயத்திற்கு பிள்ளையாகிய இயேசுவையும் கூட்டி கொண்டு போனார்கள் – லூக்கா 2:41-43
Bro. Jeyaseelan, Mumbai