பெந்தெகொஸ்தே திருநாள்


 பெந்தெகொஸ்தே திருநாள்

யூத மக்கள் பஸ்கா திருவிழாவில் இருந்து ஏழு வாரங்கள் கணக்கிட்டு, ஐம்பதாம் நாளில் அறுவடை பெருவிழா கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 34:22) அக்கொண்டாட்டம் தான் கிரேக்கத்தில் பெந்தெ கொஸ்தே (ஐம்பதாம் நாள் விழா) என்ற பெயர் பெற்றது. கோதுமை அறுப்பின் முதற்பலனை ஆண்டவருக்கு முன்பாக இஸ்ரவேலர்கள் செலுத்தி, நன்றிகூறி, களிகூர்ந்து அப்பண்டிகையைக் கொண்டாடினர்

    

கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் இயேசுவின் சிலுவை பாடுகளும், மரணமும் உயிர்த்தெழுதலும் நிகழ்ந்து ஐம்பது நாட்கள் நிறைவுற்றபோது, விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவி இறங்கி வந்து அவர்களைத் தடப்படுத்தினார். அந்த நாள் பெந்தெகொஸ்தே திருநாளாக அமைந்தது. (அப்போஸ்தலர் 2:1-41)

1. சபைகள் பிறந்த நாள் 

பெந்தெகொஸ்தே நாளானது சபையின் பிறந்தநாளாகக் கருதப்படுகிறது. அப்போஸ்தலர் 2:42,47 அவர்கள் அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள்…  இரட்சிக்கப்படுகிறவர் களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

2. சமத்துவம் நிறைந்த நாள் 

அப்போஸ்தலர் 2:44-46 விசுவாசிகள் எல்லாரும் ஒருமித்திருந்து, சகலத் தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத் தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து…

3. சத்தியம் வளர்ந்த நாள் 

அப்போஸ்தலர் 2:38 (36-41) பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந் திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்… அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் (3000) சேர்க்கப்பட்டனர்

Author: Rev. M. Arul Doss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *