முன்னே போவார்
ஏசாயா 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை, நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை, கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
1. நமக்கு முன்னே போய் தடைகளை நீக்கிப்போடுகிறார்
மீகா 2:13
தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்.
2.நமக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்
ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. நமக்கு முன்னே போய் சத்துருக்களை முறியடிப்பார்
1 நாளாகமம் 14:15
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு, பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
0 Comments