வேதத்தில் 3 (மூன்று)
1) பேதுரு இயேசுவை 3 முறை மறுதலித்தான் – மத் 26:75
2) பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள் 3 (ஆவி, ஜலம், இரத்தம்) – 1 யோ 5:8
3) எலியா ஜெபித்த போது 3 வருஷம் 6 மாதம் மழை பெய்யவில்லை – யாக் 5:17
4) மோசேயை அவனது பெற்றோர் 3 மாதம் ஒளித்து வைத்தார்கள் – எபி 11:24
5) பவுல் சரீரத்தில் கொடுக்கபட்ட முள் நீக்கும்படி கர்த்தர் இடம் 3 முறை வேண்டினார் – 2 கொரி 12:8
6) விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்முன்றும் நிலைத்திருக்கிறது – 1 கொரி 13:13
7) சவுல் கர்த்தரால் தொடபட்ட போது 3 நாள் பார்வையற்றவனாக புரியாமல் குடியாமல் இருந்தான் – அப்போ 9:9
8) இயேசு 3 வருஷமாக அத்திமரத்தில் கனியை தேடினார் – லூக் 13:7
9) இயேசுவிடம் வந்த ஜனங்கள் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார்கள் – மத் 15:32
10) 3 நாளைக்கு பின்பு உயிர்த்தெழுவேன் என்று இயேசு கூறினார் – மத் 27:63
11) 2 பேர் 3 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் போது அவர்கள் நடுவில் கர்த்தர் இருக்கிறார் – மத் 18:20
12) யோனா இரவும் பகலும் 3 நாள் ஒரு பெரிய மீன் வயிற்றில் இருந்தார் – யோனா 1:17
13) தானியேல் தினமும் 3 வேளை முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணினார் – தானி 6:10
14) யோபுக்கு 3 குமாரத்திகள் பிறந்தார்கள் – யோபு 42:13
15) எஸ்தர் 3 நாள் இரவும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்து உபவாசம் செய்தாள் – எஸ்தர் 4:16