7 விதமான மான்கள்

                                                                                                                                                                                                                  1.  நீதிமான்   – மத்தேயு 10 : 41

தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளு

கிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

2.  கல்விமான் – மத்தேயு 11 : 25

அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

3.  புத்திமான் – I கொரிந்தியர் 10 : 15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லு

கிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

4.  மகாபுத்திமான் – நீதிமொழிகள் 14 : 29

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

5.  எஜமான் – லூக்கா 19 : 17

எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

6.  சீமான் – ஆதியாகமம் 24 : 35

கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளி

யையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

7.  அநீதிமான் – அப்போஸ்தலர் 24 : 15

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திரு

ப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டி

ருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.

                  

Bro. Jeyaseelan,

 Mumbai,

Mob : 9820532501

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *