தனி ஒருவன்
1) மாம்ச மலையான கோலியாத்தை எதிர்க்க ஒருவரும் முன் வராத போதும் ஒற்றை கல்லை வைத்து வீழ்த்திய தாவீது தனி ஒருவன் தான். (1 சாமுவேல்:17)
2) ஊரெல்லாம் 30 நாட்கள் தரியு ராஜாவை வணங்க கட்டளை பிறப்பித்த போது முதிர் வயதிலும் மூன்று வேளை முழங்கால் படியிட்டு தேவனை தொழுகை செய்து சிங்கத்தை வீழ்த்திய தானியேல் தனி ஒருவன் தான். (தானியேல் 6)
3) இரண்டு தூண்களையும் சாய்த்து தேவனுக்கு விரோதமான 3000 பெலிஸ்தியர்களை வீழ்த்திய சிம்சோன் தனி ஒருவன் தான். ( நியாயாதிபதிகள் 16)
4) ஆமான் என்பவன் யூத இனத்தையே அழிக்க நினைத்த போது தன் இனத்தைக் காக்க மூன்று நாள் உபவாசம் இருந்து ராஜா முன் நின்ற எஸ்தர் தனி ஒருவள்தான். (எஸ்தர் 3,5)
5) 450 பாகல் தீர்க்கதரிசியின் முன் வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே உண்மையான தேவன் என்று நிருபித்த எலியா தீர்க்கதரிசி தனி ஒருவன் தான். ( 1 இராஜாக்கள் 18)
6) எல்லோரும் பாவம் செய்து சாத்தானால் தோல்வி அடைந்தபோது எந்த பாவம் செய்யாமல் சாத்தானை ஜெயித்த இயேசு கிறிஸ்து தனி ஒருவர் தான்.
0 Comments