யோவான் ஸ்நானன்
1) பிறப்பதற்கு முன்பு இவரை குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது – ஏசா 40:3, மல்கி 4:5,6
2) ஜனங்களை பிரியப்படுத்த பிரசங்கம் செய்கிறவர் அல்ல (கோடரியானது மரங்கள் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்) – லூக் 3:9
3) அலங்கார வஸ்திரம் தரிக்காதவன் என்று இயேசு சாட்சி கொடுத்தார் – லூக் 7:25
4) தேவனால் அனுப்பப்பட்டவன் – யோ 1:6
5) பக்தி உள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் (சகரியா & எலிசபெத்) – லூக் 1:6
6) வயிற்றில் இருக்கும் போது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர் – லூக் 1:41, 1:25
7) பிறப்பின் நிமித்தம் அனேகர் சந்தோஷப்பட்டார்கள் – லூக் 1:14
8) திராட்சை ரசமும் மதுவும் குடியாதவர் – லூக் 18:17
9) மனம் திரும்புதலை குறித்து பிரசங்கம் செய்தவர் (யாருக்கும் பயப்படாமல்) – லூக் 3:7
10) வனாந்தரத்தில் பிரசங்கம் செய்தவர் (அது மிகவும் கஷ்டம்) – லூக் 3:2
11) ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில யோவான்ஸ்நானனை பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினது இல்லை – மத் 11:11
12) தாழ்மை உள்ளவர் – யோ 3:30
13) இயேசுவை குறித்து சாட்சி கொடுத்தார் – யோ 1:29
14) தன்னிடத்தில் வந்தவர்களை அவரிடத்தில் (இயேசு) அனுப்பினார். இதுவே மெய்யான ஊழியக்காரனின் அடையாளம் – யோ 1:35
15) அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்று இயேசு யோவானஸ்நானனை குறித்து சாட்சி கொடுத்தார் – யோ 5:35
0 Comments